தாங்கள் பேசுவதையும், தங்கள் செயல்களையும் விளக்கிச் சொல்லாமலேயே ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் உணர்ச்சி ரீதியில் துணையாக இருக்க வேண்டும்.
காதலிலோ, திருமண உறவிலோ நீங்கள் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள். ஆனால் உங்களிடம் கேட்கவே மாட்டார்கள். எனவே, நீங்களாகவே அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என பெண்கள் சொல்லாததை நீங்களே புரிந்துகொண்டு செய்ய வேண்டும் அவர்கள் சொல்லாமல் சின்ன சின்ன வேலைகளை நீங்களே செய்தால் அவர்கள் அதை ரசிப்பார்கள்.
அடிக்கடி நெருக்கமான சூழலை உருவாக்குவது உங்களின் காதல் அல்லது திருமண உறவை பலமாக்கும். இதற்கு பெண்கள் கேட்க மாட்டார்கள். இந்த சந்தர்பத்தை ஆண்களே உருவாக்குவது அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.
பெண்கள் சர்ப்பரைஸை மிகவும் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி சர்ஃப்பரைஸ் கொடுப்பது உங்களின் உறவை நீங்கள் உறுதியாக்கும்.
முத்தம், அணைத்தல், பாராட்டு ஆகியவற்றை பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கேட்கவே மாட்டார்கள். இதிலும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
அவர்களின் எண்ணத்திற்கு மதிப்பளிப்பதை பெண்கள் எதிர்பார்ப்பார்கள். எனவே, அதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.