தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளவர் ராஷி கண்ணா.
ராஷி கண்ணா இளம் வயதில் பாடகியாக ஆசைப்பட்டார். ஆனால் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே ராஷி கண்ணாவின் லட்சியமாக இருந்தது.
மெட்ராஸ் கஃபே (2013) என்ற ஹிந்தித் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
பின்பு தெலுங்கு திரைப்படமான ஊஹலு குசகுசலேட், தமிழ் படமான இமைக்கா நொடிகள், மலையாள படமான வில்லன் ஆகிய படங்களில் நடித்தார்.
தனது நடிப்பின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்தார் ராஷி கண்ணா. தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 3, சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
உடல் எடையை குறைக்க கடுமையாக உழைத்து வந்தார் ராஷி கண்ணா. கடந்த சில மாதங்களாக கடினமான ஒர்க் அவுட்களை மேற்கொண்டார்.
தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறியுள்ளார் ராஷி கண்ணா. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.