கவினின் ஸ்டார் படம்... ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு

';

நடிகர் கவின்

நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்த போதே பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். பிறகு, திரைப்படங்கிளில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

';

லிஃப்ட்

2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் லிஃப்ட்’ படத்தில் நடித்தார்.

';

டாடா

இதனை அடுத்து அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டாடா’ என்ற எமோஷனல் காதல் கதையில் நடித்திருந்தார். இப்படம் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்தது.

';

கவினின் ஸ்டார்

அண்மையில் நடிகர் கவின் ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. கவின் இதில் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார்.

';

ஸ்டார்

ஸ்டார் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே ஒரு கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூல் செய்தது. 2 வார முடிவில் படம் ரூ. 21 கோடி வரை வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாம்.

';

ஸ்டார் ஒடிடி ரிலீஸ்

ஸ்டார் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதிக்காக பலரும் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஜூன் மாதம் 14ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

';

அடுத்தடுத்த படங்கள்

தற்போது நடிகர் கவின் வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து விஷ்ணு இடவன் இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story