நடிகர் விஜயகாந்தின் அரசியல் ஒருபுறம் இருக்க சினிமாவே அவரின் முதன்மையான துறையாகும்.
அவர் நடிப்பில் வெளியாகி 200 நாள்கள் வரை ஓடியதாக கூறப்படும் ஐந்து படங்களை இதில் காணலாம்.
விக்ரமன் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகரி 200 நாள்களை வெற்றிகரமாக திரையரங்கில் ஓடியது.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1990ஆம் ஆண்டில் வெளியான புலன் விசாரணை படம் என்ற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் 220 நாள்கள் வரை ஓடியது.
1991ஆம் ஆண்டு எம்.தியாகராஜன் இயக்கத்தில் வெளியான மாநகர காவல் திரைப்படம் 230 நாட்களுக்கு மேலாக ஓடியது.
ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிராபகரன் திரைப்படம் விஜயகாந்தின் 100ஆவது படமாகும். இது சென்னை காசி திரையரங்கில் 300 நாள்கள் ஓடியது.
1992ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்டம் சுமார் 315 நாள்கள் ஓடியது. இதுதான் அவருக்கு அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாகும்.