அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூசணிக்காயில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்தும் உள்ளது. இது இதயத் துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
அதிக புரதம், கிளைசினின் மற்றும் பி-காங்கிளிசினின் உள்ள சோயாபீன் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உலர் பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றன. இவற்றில் புரதம், கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற பண்புகள் உள்ளன.
தினமும் ஒரு அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் உள்ளது. கொலஸ்ட்ராலை விரைவாகக் குறைக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.