குரு பெயர்ச்சி நாளை: 12 ராசிகளுக்கும் என்னென்ன நடக்கும்

';

மேஷம்

ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், திருமணம் என எல்லாம் கிடைக்கும். வண்டி, வாகனம் ஓட்டும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் கவனம் தேவை.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

மிதுனம்

எதிர்பார்த்து இருந்த இடங்களில் பண வரும். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க முயற்சி செய்வது நல்லது அல்லது சுப செலவுகளாக மாற்றுவது நல்லது.

';

கடகம்

பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை அடையப் போகிறீர்கள். பல நல்ல வேலைவாய்ப்புகள் உங்கள் வீடு தேட்டி வரும்.

';

சிம்மம்

உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்றே சொல்ல வேண்டும். நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது.

';

கன்னி

இதுவரை சந்தித்த பல வித பிரச்னைகள், அதனால் ஏற்பட்ட மன கவலையும், அலைச்சலிலிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது. வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

';

துலாம்

சிலருக்கு வீடு, மனை வாங்க கடன் உதவி கிடைக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

';

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் மேம்படும், அழகு கூடும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

';

தனுசு

உடல் ஆரோக்கியம் குறையலாம். உங்களின் புகழ் குறைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கவனமாக முதலீடு செய்வது நல்லது.

';

மகரம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள், செல்வ செழிப்பை அதிகரிக்க வாய்ப்புகளை பெறுவீர்கள். திருமண வாய்ப்பு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

';

கும்பம்

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேலை விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்பு வரக்கூடும். பார்வைக் கோளாறு வரலாம்.

';

மீனம்

திருமண வாழ்க்கை பிரச்சனை எல்லாம் சரியாகும். நல்ல முதலீடுகள் மூலம் சிறப்பான லாபத்தை பெற்றிடலாம்.

';

VIEW ALL

Read Next Story