குரோதி ஆண்டு ஆடி மாதம் கேட்டை நட்சத்திரம் கூடிய குருவின் வியாழக்கிழமை! 12 ராசிகளுக்குமான ராசிபலன்!

';

மீனம்

கவனத்துடன் செயல்பட்டால் தொழில் மற்றும் பணியிடத்தில் மதிப்பு கூடும். குடும்பத்தில் இறுக்கமான சுழல் மாறும். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். தடைபட்ட அரிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

';

கும்பம்

இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடையும். தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்பட்டால் லாபம் கிடிஅக்கும், மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் வந்தாலும் உடல்நிலையில் பிரச்சனை ஏதும் இருக்காது

';

மகரம்

ஆன்மீகம் தொடர்பான புரிதல் மேம்படும், மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், இடையூறாக இருந்தவர்கள் விலகுக்ம் காலம் இது, தொழில் செய்பவர்களுக்கு முதலீடு அதிகரிக்கும், பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்

';

தனுசு

வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனை மேம்படும், வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற முடியாமல் போகலாம், குடும்பத்தினரின் மகிழ்ச்சியை முன்னிலையில் வைத்து உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை தள்ளிப்போட வேண்டிய சூழல் உருவாகும்

';

விருச்சிகம்

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும்ம். சேமிப்பதற்கான காலம் இது, சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றாலும், சில விஷயங்களில் நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது நீண்ட கால அளவில் நன்மையைத் தரும்

';

துலாம்

சமூகத்தில் செல்வாக்கு உயரும் காலம் இது, பயனற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்க, அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்

';

கன்னி

உடற்பயிற்சியில் ஆர்வம் உண்டாகும், மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த கவலைகளை தீர்க்கும் வழி கிடைக்கும், உழைப்பே உயர்வு என்பதை சொல்லிக் கொடுக்கும் நாள் இது

';

சிம்மம்

திடீர் செலவுகள் கவலையை ஏற்படுத்தும், மனதில் சோர்வும், உடலில் பலவீனமும் ஏற்படும். பொருட்களை கவனமாக கைஆளவும், உறவினர்களிடையே அனுசரிப்பு அவசியம்

';

கடகம்

ஜாலியாக இருக்கலாமே என்ற நினைப்பு இன்று உங்களை உற்சாகம் கொள்ள வைக்கும். குடும்பம் குழந்தை என சிறிய வட்டத்திற்குள் அடைந்திருப்பவர்கள் வெளி உலகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் நாள் இது

';

மிதுனம்

வயிற்று பிரச்சனைகள் ஏதேனும் ஏற்படலாம், எதிரிகளும் நண்பராகும் நாள் இன்று. போட்டி பொறாமையால் உங்களுக்கு தீங்கு செய்ய பிறர் முனையலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்

';

ரிஷபம்

விட்டுக் கொடுத்து கெட்டு போனவர் யாருமில்லை என்ற சொல் உங்களுக்குத் தான் பொருந்தும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள், சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும், இன்று குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

';

மேஷம்

முயற்சிகள் வெற்றி பெறும் நாள் இது, கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும், மற்றவர்கள் உங்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை கொடுக்க வேண்டாம், முன்னெச்சரிக்கை நன்மை பயக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story