திருப்பதி லட்டு தயாரிக்கும் நியமங்கள்! லட்டுன்னா இப்படித்தான் இருக்கனும்! உலக பிரசித்தி பெற்ற பெருமாளின் பிரசாதம் தயாரிப்பு!

';

லட்டு பிரசாதம்

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

';

மோசடி

உலக பிரசித்தி பெற்ற பிரசாதத்தில் மோசடி என்ற விஷயம் உண்மையா இல்லை அரசியல் நோக்கம் கொண்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் என்றால், திருப்பதி லட்டை எப்படி தயாரிகிறார்கள்? தெரிந்துக்கொள்வோம்

';

நெய்

லட்டு தயாரிக்க திருப்பதியில் நெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அதில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் ‘லட்டு’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது

';

இனிப்பு

லட்டு தயாரிக்க இனிப்புக்கு சர்க்கரை மற்றும் கல்கண்டு பயன்படுத்த வேண்டும்

';

பூந்தி

லட்டுக்கான பூந்தி தயாரிக்க கடலைமாவை பக்குவமாக கரைத்து அதை, சல்லடைக் கரண்டியில் விட்டு நெய்யில் பொரித்து எடுக்க வேண்டும்

';

ஏலக்காய்

ஏழுமலையானின் திருப்பதி லட்டு என்றாலே ஏழூருக்கு மணக்கும் என்று சொல்வார்கள், அதற்கு காரணம் தரமான ஏலக்காய் தான்

';

முந்திரி

திருப்பதி லட்டில் பூந்தியுடன் போட்டி போடும் அளவுக்கு முந்திரியும் தாராளமாக சேர்ப்பது வழக்கம்

';

உலர்பழங்கள்

முந்திரியைத் தவிர, உலர் திராட்சை உள்ளிட்ட உலர்பழங்களும் லட்டில் சேர்க்கலாம்

';

லட்டு

சர்க்கரைப்பாகில் பூந்தியை ஊறவைத்து, அதில் ஏலக்காய் பொடியை கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர்பழங்களை கலந்து உருண்டையாக பிடித்தால் திருப்பதி லட்டு, பெருமாளுக்கு படைக்கத் தயார்...

';

VIEW ALL

Read Next Story