ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியில் தற்போது இணைந்துள்ளார் தனுஷ் கோட்டியான்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சேர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் கோட்டியான் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்து வருகிறார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக இந்தியா ஏ அணியிலும் ஒரு பகுதியாக இருந்தார் தனுஷ் கோட்டியான்.
மும்பையின் ரஞ்சி டிராபி 2023-24 வெற்றியில் தனுஷ் கோட்டியான் முக்கிய பங்கு வகித்தார்.
2023-24 ரஞ்சி டிராபி சீசனில் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
33 முதல் தர போட்டிகளில் விளையாடி 25.7 சராசரியில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் தனுஷ் கோட்டியான்.