பெங்களூரில் நடைபெற்ற உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது. இந்த போட்டியில் தொடக்க வீரராக டிவோன் கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா விளையாடினார்.
இதில் 15 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்று சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் 48 ஆண்டுகால உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் உலகக் கோப்பையிலே மூன்று சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா படைத்திருக்கிறார்.