டி20: ரோகித் சர்மா படைக்கப்போகும் 3 உலக சாதனைகள்..!

';

ஆப்கானிஸ்தான் தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா 3 உலக சாதனைகளை படைக்க இருக்கிறார்.

';

முதலாவதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இதுவரை 148 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

';

எனவே இத்தொடரில் இன்னும் 2 போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

';

2வதாக ரோகித் சர்மா இதுவரை விளையாடிய 148 போட்டிகளில் 99 முறை இந்தியா வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

';

எனவே இத்தொடரில் இன்னும் 1 வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் ரோகித் சர்மா படைப்பார்.

';

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் சோயப் மாலிக் பாகிஸ்தான் பதிவு செய்த 86 வெற்றிகளில் ஒரு அங்கமாக இருந்து 2வது இடத்தில் உள்ளார்.

';

3வதாக இதுவரை 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா மொத்தமாக 182 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த 182இல் 82 சிக்ஸர்களை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

';

இந்த தொடரில் இன்னும் 5 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயான் மோர்கன் சாதனையை உடைத்து ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைப்பார்.

';

தற்போது வரை இயன் மோர்கன் 86 சிக்சர்கள் அடித்து உலகிலேயே அதிக சிக்சர்கள் அடித்த கேப்டனாக முதலிடத்தில் உள்ளார்.

';

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் மற்றும் இந்தியாவும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 82 சிக்ஸர்களுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story