ஐபிஎல் 2024: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்-க்கு திரும்பும் வீரர்

';

ஐபிஎல் 2024 ஏலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. முதல்முறையாக டிசம்பர் 19ம் தேதி துபாயில் ஏலம் நடைபெறவுள்ளது.

';

ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் 333 பேர் உள்ளனர். இந்த ஏலத்தில் ஒரு வீரர் 9 வருட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல்-ல் மீண்டும் வர உள்ளார்.

';

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் 2024 ஏலப் பட்டியலில் ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் இருக்கிறார்.

';

ஸ்டார்க் கடைசியாக ஐபிஎல் 2015 -ல் விளையாடினார். இப்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு லீக்கிற்கு மீண்டும் விளையாட இருக்கிறார்.

';

ஸ்டார்க்கின் ஐபிஎல் பயணம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியுடன் தொடங்கியது. அங்கு அவர் இரண்டு சீசன்களில் விளையாடினார்.

';

2014 சீசனில், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி RCB க்காக இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.

';

2015 சீசனில் அவரது தாக்கம் தொடர்ந்தது, அங்கு அவர் 20 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹலுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

';

ஐபிஎல் 2018 ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார்க்கை வாங்கியது.

';

துரதிர்ஷ்டவசமாக, ஸ்டார்க் காயம் காரணமாக அந்த சீசனில் இருந்து விலகினார்.

';

தற்போது மீண்டும் வந்திருக்கும் அவரை ஏலத்தில் எடுக்க 10 அணிகளும் முனைப்புடன் இருக்கின்றன

';

VIEW ALL

Read Next Story