சென்னை தீவுத் திடல்: வரலாறு சொல்வது என்ன?
சென்னையில் பிரபலமாக இருக்கும் இடங்களில் ஒன்று தீவுத் திடல்
இது ஒரு கடல் தீவு அல்ல, ஆற்றுத் தீவு. கூவம் ஆற்றால் சூழப்பட்டிருக்கும் தீவு
சென்னையின் எழும்பூர் பகுதியில் கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கூவம் ஆறு இரண்டாக பிரியும் மேட்டுப் பகுதியை தீவுத் திடல் என்பர்.
இத்தீவுத்திடல் 19ஆம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
இத்தீவில் சென்னையின் கவர்னராக இருந்த தோமஸ் முன்ரோயின் சிலை ஒன்று உள்ளது.
சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன.
பல வரலாற்று நிகழ்வுகளையும், பொக்கிஷ தகவல்களையும் கொண்டிருக்கும் இந்த இடம் இப்போது அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் இடம்பெறுகின்றன