ஓலா கேப்ஸ் போன்ற சில நிறுவனங்கள் கூகுள் மேப்ஸ் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்தியதை அடுத்து, பல அம்சங்களை கூகுள் மேம்படுத்தியிருக்கிறது
குறுகிய சாலை எச்சரிக்கை, ஃப்ளைஓவர் எச்சரிக்கை என செயற்கை நுண்ணறிவில் இயங்கும் அம்சங்களுடன் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் கூகுள் மேப்ஸில் இந்த அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன
நீங்கள் செல்லும் பாதையில் ஏதேனும் வித்தியாசமான அல்லது விபத்து நடைபெற்றால், அதனை புகாரளிக்கும் முறையை Google எளிதாக்கியுள்ளது. கூகுள் மேப்ஸில் ஒரு சில கிளிக்குகள் மூலம் சம்பவங்களைப் புகாரளிப்பதும், பிறரால் பகிரப்பட்ட சம்பவங்களையும் தெரிந்துக் கொள்வதும் சுலபமாகிவிட்டது
காரை ஓட்டும்போது நீங்கள் செல்லும் சாலை குறுகியதாக இருந்தால் அதைக் காட்டும் அம்சம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள், வீதிக் காட்சி மற்றும் பிற தகவல்களைப் பயன்படுத்தி சாலையின் அகலத்தை மதிப்பிட்டு, தரவுகளின் அடிப்படையில் இந்த அம்சம் வேலை செய்கிறது
செல்லும் பாதையில் மேம்பாலம் இருந்தால், அது தொடர்பான ஐகானை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவரும் விரும்பும் இந்த அம்சம் 40 நகரங்களில் உள்ள கூகுள் மேப்ஸில் கிடைக்கிறது
8,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்கு, இந்தியாவின் முன்னணி EV சார்ஜிங் வழங்குநர்களுடன் கூகுள் இணைந்துள்ளது. இதன் மூலம், EV சார்ஜிங் நிலையங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் மேப்ஸ் காண்பிக்கும்
செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள இடங்களைப் பற்றிய தகவல்களையும் கூகுள் மேப்ஸ் வழங்கும். உதாரணமாக சேலத்திற்கு செல்ல திட்டமிடுபவர்கள், அதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், அங்குள்ள முக்கியமான இடங்களின் பட்டியலையும் பார்க்கலாம்
ONDC மற்றும் Namma Yatri உடன் கூட்டு சேர்ந்துள்ள Google Maps, டிக்கெட் முன்பதிவு சேவையை வழங்குகிறது. இதன் மூலம், மெட்ரோ அல்லது பிற சேவைகளை வரைபடத்தில் தேடலாம், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.