இந்த வருடம் ஜனவரி 2024ல் கார்களின் விற்பனை அதிகளவில் இருந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் 5 கார்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக டிமாண்ட் இருந்து வந்தது.
இதில் மாருதியின் பலேனோ முதலிடத்தில் உள்ளது. இது அதிகம் விற்பனையாகும் கார் ஆகும்.
அதன் பிறகு டாடா பஞ்ச், மாருதி வேகன்ஆர், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி டிசையர் ஆகியவை பட்டியலில் உள்ளன.
ஜனவரியில் பலேனோ அதிக விற்பனை ஆகி உள்ளது. மொத்தம் 19,630 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதன் விற்பனை 20% அதிகரித்துள்ளது.
டாடா பஞ்ச் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை ஆண்டு அடிப்படையில் 50% அதிகரித்து, விற்பனை எண்ணிக்கை 17,978 ஆக உள்ளது.
மூன்றாவது இடத்தை மாருதி வேகன்ஆர் உள்ளது. ஜனவரி 2024ல் அதன் விற்பனை 17,756 யூனிட்டுகள் ஆகும்.
டாடா நெக்ஸான் நான்காவது இடத்தில் உள்ளது. 10% அதிகரித்து மொத்தம் 17,182 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
மாருதி டிசையர் 16,773 கார்கள் விற்பனையாகி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை 48% அதிகரித்துள்ளது.