ஓடும் ரயிலில் காலி சீட் இருப்பதை அறிவது எப்படி?
ஓடும் ரயிலில் காலி சீட் இருப்பதை IRCTC செயலி மூலமே அறிந்துக்கொள்ளலாம்.
ரயில்வேயின் IRCTC தளம் டிக்கெட் பதிவில் இருந்து ரயில் குறித்த அத்தனை தகவல்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது.
இதில், தங்களின் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
ஆனால், முன்பதிவு செய்ய நீங்கள் அந்த பயணம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும்.
திடீரென திட்டமிடும் பயணத்திற்கு முன்பதிவு செய்ய இயலாத சூழ்நிலைதான் நீடிக்கிறது.
இந்நிலையில், ஓடும் ரயிலும் காலியாக உள்ள இருக்கைகளை நீங்கள் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டில் இருந்தபடியே அந்த தகவல்களைப் பெறலாம்.
இதற்காக நீங்கள் IRCTC செயலியில் லாக்-இன் வேண்டிய அவசியமில்லை. இந்த செயலியில் 'Chart Vacancy' எனப்படும் அம்சம் உள்ளது.
அதன்மூலம் காலியான இருக்கைகள் குறித்த தகவலைப் பெறலாம்.