27 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா!

';

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 7 சீட்டர் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

';

இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 9,299 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

';

இந்த எண்ணிக்கையானது நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,528 ஆக உயர்ந்துள்ளது. இது 45 சதவீத வளர்ச்சியாகும்.

';

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) 8.64 லட்ச ரூபாயாக உள்ளது.

';

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக இருக்கிறது.

';

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமல்லாது, சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைப்பது மாருதி சுஸுகி எர்டிகா காரின் மிகப்பெரிய பலம் ஆகும்.

';

இதில் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

';

7 சீட்டர் காராக இருப்பதுடன், அதிக மைலேஜையும் வழங்குவதால், மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

';

அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

';

VIEW ALL

Read Next Story