ஹேக்கிங்கைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

';

உங்கள் போன் ஹேக் செய்யப்படுகிறதா?, எவ்வளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது? ஐஎம்இஐ எண் தொலைந்தால் என்ன செய்வது? என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

';

இவை அனைத்தும் சில சிறப்பு USSD குறியீடுகள் மூலம் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

';

தேசிய குற்றப் புலனாய்வுப் பிரிவு (NCIB) சமீபத்தில் இந்த குறியீடுகளை வெளியிட்டது.

';

இதன்படி உங்கள் தொலைபேசி அழைப்பு அல்லது தொலைபேசி எண் வேறு ஏதேனும் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை அறிய *#21# குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

';

ஹேக்கர்களால் பல அழைப்புகள் ஃபார்வேர்ட் செய்யப்படும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு ஆலோசனையை தேசிய குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்வைத்துள்ளது.

';

இது தவிர, உங்கள் போனின் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர், கேமரா, சென்சார் போன்றவை சரியாக வேலை செய்கிறதா என சரிபார்க்க குறியீடும் உள்ளது.

';

இந்த குறியீடு #0#. நீங்கள் செய்ய வேண்டியது தொலைபேசியின் டயல் பேடில் இந்த குறியீட்டை உள்ளிட்டு அழைப்பை மேற்கொள்ளுங்கள். மேலே உள்ள அனைத்து தகவல்களும் இந்த குறியீட்டின் மூலம் வழங்கப்படும்.

';

NCIB வெளியிட்ட மற்றொரு குறியீடு *#07#. தொலைபேசியின் SAR மதிப்பு விவரங்களைக் கண்டறிய இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. SAR மதிப்பில் தொலைபேசி உமிழும் கதிர்வீச்சு பற்றிய தகவல்கள் உள்ளன.

';

இதன் மூலம், உங்கள் போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது மற்றும் அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை கண்டறிய முடியும்.

';

*#06# என்பது தொலைபேசியின் IMEI எண் மற்றும் பிற விவரங்களை அறிய பயன்படுத்த வேண்டிய குறியீடு. இந்த எண் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் தொலைபேசி தொலைந்தால், அதைக் கண்டுபிடிக்க இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.

';

##4636## என்பது உங்கள் தொலைபேசியின் பேட்டரி, இணையம், வைஃபை போன்றவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க உதவும் குறியீடு. இவற்றின் மூலம் போனின் நெட்வொர்க் பிரச்சனைகளை விரிவாகச் சரிபார்க்கலாம்.

';

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றொரு குறியீடு ##34971539##. உங்கள் போனின் கேமரா சரியாக இயங்குகிறதா என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.

';

2767*3855# என்ற குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை ரீசெட் செய்யலாம்

';

VIEW ALL

Read Next Story