பட்டா சரிபார்ப்புக்கு மக்கள் அலைய வேண்டாம்..! தமிழக அரசின் புதிய ஆன்லைன் திட்டம்

S.Karthikeyan
Oct 19,2023
';


தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே தற்போது ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.

';


எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்.

';


இதனால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நேரம் மிச்சமாகிறது. ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

';


இதனால், பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை. திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் "நம்பிக்கை இணையம்" என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.

';


மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது.

';


ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இதற்கெல்லாம் கடிவாளம் போடவே, பத்திரப்பதிவு துறையில், இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

';


அந்தவகையில், கட்டுமான துறையிலும், புதுபுது வசதிகள் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்போதுகூட, ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

';


அதாவது, கட்டுமான திட்ட அனுமதி பணிகளை ஒற்றை சாளர முறைக்கு மாற்றுவதற்காக, ஒருங்கிணைந்த புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளத்தில் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

';


இருந்தாலும், கட்டிட அனுமதி கேட்டு, தாக்கலாகும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, கூடுதலாக புதிய வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாம்.

';


குறிப்பாக, பட்டா, நில வரைபடம், கிராம வரைபடங்களை ஆய்வு செய்வற்காகவே, ஒற்றை சாளர முறைக்கான சாப்ட்வேரில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை உறுதி செய்ய, அலைய வேண்டிய தேவை இருக்காது.

';


அதுமட்டுமல்ல, முதல் நிலை அலுவலரே இந்த ஆவணங்களை சரி பார்த்துவிட முடியும் என்பதால், விண்ணப்பதாரர்களுக்கு நேரமும் மிச்சமாகும் என்கிறார்கள். விரைவில் இந்த வசதி, பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் சொல்கிறார்கள்

';

VIEW ALL

Read Next Story