இனி சிம் கார்டு இதற்கெல்லாம் தேவையில்லை..!

';

மொபைல் பயனர்கள் விரைவில் சிம் கார்டு அல்லது இணைய இணைப்பு இல்லாமலேயே வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

';

அதற்கான டைரக்ட் டூ மொபைல் (Direct-2-Mobile) ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு சோதனை செய்து வருகிறது.

';

ஒளிபரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் செயலர் அபூர்வ சந்திரா, டைரக்ட்-டு-மொபைல் (D2M) தொழில்நுட்பம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்றார்.

';

இதன் சோதனைகள் விரைவில் 19 நகரங்களில் நடத்தப்படும் என்றும், இதற்கு 470-582 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வலுவான வசதிகளை உருவாக்குவதாகவும் கூறினார்.

';

25-30 சதவீத வீடியோ ஸ்ட்ரீமிங் டிராஃபிக்கை D2M சேவைக்கு மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க்குகளின் டிராபிஃக் நிலை மேம்படும், இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும் கூறினார்.

';

கடந்த ஆண்டு, பெங்களூரு, கர்தவ்யா பாத் மற்றும் நொய்டாவில் D2M தொழில்நுட்பத்தை சோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

';

D2M தொழில்நுட்பம் நாடு முழுவதும் உள்ள 8-9 கோடி டி.வி. இல்லாத வீடுகளை இந்த சேவை சென்றடையும் என்றும் அபூர்வ சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

';

நாட்டில் உள்ள 28 கோடி குடும்பங்களில், 19 கோடி குடும்பங்களில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

';

VIEW ALL

Read Next Story