மேஷம்

உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களை பற்றி புதிய கண்ணோட்டம் பிறக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

';

ரிஷபம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விவரங்களை அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

';

மிதுனம்

ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

';

கடகம்

நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

';

சிம்மம்

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். போட்டி தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விரயங்கள் நிறைந்த நாள்.

';

கன்னி

மனதில் புதுவிதமான எண்ணங்களும், ஆசைகளும் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.

';

துலாம்

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உயர்வு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

';

விருச்சிகம்

கற்பனை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

';

தனுசு

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.

';

மகரம்

எதிர்பாராத சில பயணங்களால் தூக்கமின்மையும், சேர்வும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.

';

கும்பம்

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.

';

மீனம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டிகள் நிறைந்த நாள்.

';

VIEW ALL

Read Next Story