உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்!

Predicting Cancer Before Many Years: புற்றுநோய் ஏற்படுமா என்பதை 7 ஆண்டுகளுக்கும் முன்னரே கண்டறியலாம்! நோய் ரகசியத்தை புட்டுப்புட்டு வைக்கும் ஆய்வு...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 01:13 PM IST
  • புற்றுநோய் ஏற்படுமா என்பதை கணிக்கலாம்
  • 7 ஆண்டுகளுக்கும் முன்னரே புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறுகளை கண்டறியலாம்!
  • நோய் ரகசியத்தை புட்டுப்புட்டு வைக்கும் ஆய்வு...
உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா? இரத்த புரதம் சொல்லும் ரகசியம்! title=

புற்றுநோய் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, அது ஒருவருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பது தெரிந்தால் எப்படி இருக்கும்? நோயே பாதிக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று உற்சாகம் கொடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகள், நீண்ட கால உழைப்பு என பல்வேறு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலரின் அறிவாலும், திறமையாலும் தான் மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ, நோய் ஏற்படும் என்ற அச்சம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

அந்த வகையில், புற்றுநோயை, அது ஏற்படுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்கலாம் என்று ஒரு ஆராய்சி சொல்வது மருத்துவ உலகில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வின்படி, ஒருவரின் இரத்தத்தில் இருக்கும் புரதங்களை வைத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை கணிக்கலாம்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்சி ஒன்று, இரத்த மாதிரி மூலம் புற்றுநோய் ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோடிட்டுக் காட்டுகிறது. 

இரத்த மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்ட சில புரதங்கள், பிற்காலத்தில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!! 

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதை குணப்படுத்திவிடலாம் என்பதும், நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றிவிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்கள், முற்றிய பிறகு கண்டறிவதைவிட, தொடக்க காலகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. 

எனவே தான், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இரத்தத்தில் காணப்படும் புரதங்கள், நோயறிதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயைக் கண்டறிவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Cancer Research UK அமைப்பின் நிதியுதவி பெற்ற இந்த ஆய்வு, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில், 44,000 க்கும் மேற்பட்ட நபர்களின் இரத்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது. இதில் 4,900 பேருக்கு சில ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. 

புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் இரத்தத்தில் உள்ள புரதங்களை, நோய் பாதிக்காதவர்களின் புரத மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்த்த  விஞ்ஞானிகள், 19 வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடைய 618 புரதங்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த புற்றுநோய் வகைகளில் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா, பெருங்குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் அடங்கும்.

மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்
 
இந்த இரத்த மாதிரி எடுக்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்கும் பிறகு சிலருக்கு புற்றுநோய் உருவாகியதும், இவர்களுக்கு 107 புரதங்கள் ஒன்றுபோல இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இரத்த மாதிரி எடுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் இரத்த மாதிரியில் மொத்தம் 182 புரதங்கள் ஒன்றாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மூத்த ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கெரன் பேப்பியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் புற்றுநோய் அபாயத்தில் இரத்த புரதங்களின் பங்கைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது. 

இதேபோன்ற மற்றொரு ஆய்வு 3,00,000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளின் மரபணு தரவுகளை ஆய்வு செய்தபோது, அதில் இரத்தத்தில் உள்ள 40 புரதங்கள் அவர்களுக்கு ஒன்றுபோல இருந்தது கண்டறியப்பட்டது. இந்த புரதங்களை மாற்றுவது சாத்தியமா என்று கேட்டால், எதிர்பாராத பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்பகாலத்திலே நோய் இருப்பதை கண்டறிவது, மிகவும் தீவிரமான சிகிச்சையைத் தவிர்ப்பதற்கும், புற்றுநோயைக் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குக்றைக்கும். இது மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், ஆயுளையும் நீட்டிக்கும் என்பதால், இந்த ஆய்வுகள் பலராலும் பாராட்டப்படுகிறது.

மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News