மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்

Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நமது உடல் எடையை குறைக்கலாம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2024, 12:34 PM IST
  • காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது.
  • இது செரிமானத்தை சீராக்கி, கூடுதல் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது.
  • சமச்சீரான உணவில் காய்கள் ஒரு முக்கிய அங்கமாகும்.
மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்

Weight Loss Tips: இந்நாட்களில் உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால் அதை குறைப்பது மிகக் கடினமான ஒரு செயல்முறையாக உள்ளது. உடல் பருமனால் நமக்கு பல வித உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் நமது ஆளுமையும் பதிக்கப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

உடல் எடையை குறைக்க பொதுவாக நாம் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஜிம், உஅற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என உடல் எடையை குறைக்க, குறிப்பாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க நாம் பல வழிகளில் நம்மை வருத்திக்கொள்கிறோம் என்றே கூறலாம். சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நமது உடல் எடையை குறைக்கலாம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களை செய்தே நாம் நமது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். தொப்பை கொழுப்பை குறைக்க உணவில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிக அவசியமாகும். ஆரோக்கியமான வழியில் நம் உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் எளிதாக தொப்பை கொழுப்பை குறைத்து உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம். 

பழங்கள், காய்கள்

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை பராமரிக்க பழங்கள் (Fruits) மிகச்சிறந்த தேர்வாக பார்க்கப்படுகின்றன. எடையை குறைக்கும் பல பண்புகள் பழங்களில் உள்ளன. இவற்றில் பல வித ஊட்டச்சத்துகளும் இருப்பதால், பழங்களை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் உடல் எடையை குறைக்க முடியும்.  இவற்றில் இயற்கையான சர்க்கரையும் கிடைப்பதால், இவற்றின் மூலம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

காய்கறிகளில் (Vegetables) அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி, கூடுதல் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது. சமச்சீரான உணவில் காய்கள் ஒரு முக்கிய அங்கமாகும். உடல் எடையை குறைக்க இரவு நேரங்களில் லேசான உணவை சாப்பிட ஆசைப்படும் நபர்கள் காய்கறி சாலட்களை உட்கொள்ளலாம். இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்கள் உணவில் பருவகால காய்கறிகளை சேர்க்க வேண்டும். அதிக காய்கறிகளை சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றும் எடை இழப்புக்கும் (Weight Loss) உதவுகிறது.

விதைகள், கொட்டைகள்

விதைகள் (Seeds) மற்றும் கொட்டைகளில் (Nuts) அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இவற்றை மாலை சிற்றுண்டியாக உட்கொள்வது சிறந்ததாக இருக்கும். எண்ணெய் பதார்த்தங்களுக்கு பதிலாக, பசியை குறைக்க, ஒரு கையளவு கொட்டைகள், விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் வேகமாக குறையணுமா... இதையெல்லாம் சாப்பிடுங்க!

முழு தானியங்கள்

முழு தானியங்களில் (Whole Grains) நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்க அதிக நார்ச்சத்து, சரியான அளவு புரதம் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான அரிசி, கோதுமை இவற்றுக்கு பதிலாக முழு தானியங்களை பயன்படுத்தலாம். முழு தானியங்கள் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவுகின்றன. எனினும், பதப்படுத்தப்பட்ட முழு தானியங்களைக் கொண்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. 

சால்மன்
சால்மனில் (Salmon) புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது நீண்ட நேரம் திருப்தியான உணர்வை தருவதுடன் பசியை அடக்கவும் உதவும். 

முட்டை
முட்டையில் (Eggs) அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது. குறிப்பாக காலை உணவில் முட்டையை உட்கொண்டால் நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது. எடை இழப்புக்கு முட்டையை பயன்படுத்தும் போது நம் உடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது. 

மேலும் படிகக் | NAFLD: கல்லீரல் நோய் பாதிப்பா? இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அமுதமாகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News