30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து பிறந்த இரட்டை குழந்தைகள்!

அமெரிக்காவில் ஒரு பெண் கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் வயது தாயை விட மூன்று ஆண்டுகள் குறைவு என்பது தான்... நமப முடியவில்லை இல்லையா...!

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 9, 2023, 07:00 PM IST
  • இரட்டையர்கள் பிறந்ததன் மூலம், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
  • மிக நீண்ட காலமாக உறை நிலையில் இருந்த கரு முட்டையில் இருந்து குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர்.
  • குழந்தைகளின் கருக்கள் அமெரிக்காவின் தேசிய கரு தான மையத்தில் வைக்கப்பட்டன.
30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து பிறந்த இரட்டை குழந்தைகள்! title=

பெற்றோர் மற்றும் குழந்தைகளின் வயதிற்கு இடையிலான வித்தியாசம் பெரிய அளவிற்கு இருக்கும். இருவருக்கும் இடையே தலைமுறை இடைவெளி உள்ளது. எந்த ஒரு தம்பதியினருக்கும் குழந்தை பிறப்பது அவர்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம், ஆனால் குழந்தைகளின் வயது அவர்களின் தாயை விட 3 ஆண்டுகள் குறைவாக இருக்க முடியும் என்பதை உங்களால் நமப முடிகிறதா? இதைப் படிக்க மிகவும் வினோதமாகத் தோன்றினாலும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது, அங்கு குழந்தைகள் தங்கள் தாயை விட மூன்று வயதும், தந்தையை விட ஐந்து வயதும் இளையவர்கள். இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான கதை என்னவென்று அறிந்து கொள்வோம்.

உண்மையில், பிபிசியில் வெளியான அறிக்கையின்படி, ரேச்சல் ரிட்ஜ்வே அக்டோபர் 31, 2022 அன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இப்போது விசேஷம் என்னவென்றால், இந்தக் குழந்தைகள் 22 ஏப்ரல் 1992 அன்று பாதுகாக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த குழந்தைகள். அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதப்படுத்தப்பட்ட கருமுட்டைகளிலிருந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து அமெரிக்காவின் ஒரேகான் மாகாண தம்பதி சாதனை படைத்துள்ளனர்.

 இரட்டையர்களுடன் தொடர்புடைய சுவாரஸ்ய கதை

 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயான ரேச்சலுக்கு வயது 33, ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்குத் தாயாவார். தற்போது இவர்களுக்கு இரட்டை குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். ரேச்சல் மற்றும் பிலிப் என்ற தம்பதியினர் தானம் செய்யப்பட்ட கருக்களிலிருந்து குழந்தைகளைப் பெற முடிவு செய்தனர். இந்த உறைந்த கருக்கள் தொடர்பாக தெரிய வந்த போது, இந்த முடிவுக்கு வந்ததாக தம்பதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 32 ஆண்டுகளில் 100க்கும் அதிகமானவர்களை கல்யாணம் செய்த ‘திருமண மார்கண்டேயன்’

இந்நிலையில் பிலிப் இது குறித்து கூறுகையில், "இந்த இரண்டு கருக்களுக்கும் கடவுள் உயிர் கொடுத்தபோது எனக்கு ஐந்து வயதுதான். கருவின் உயிரியல் தந்தை இறந்தது ஏ.எல்.எஸ் எனப்படும் நோய் என்று தம்பதியிடமும் சொல்லப்பட்டது. நோய் பற்றி அறிந்த தம்பதியினர் அந்த கருக்களை தத்தெடுக்க முடிவு செய்திருந்தனர்.

அமெரிக்காவின் ரேச்சலின் இரட்டையர்கள் பிறந்ததன் மூலம், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக உறை நிலையில் இருந்த கரு முட்டையில் இருந்து குழந்தைகளை பெற்றெடுத்து, தனித்துவ சாதனையை தம்பதியினர் செய்துள்ளனர். இதற்கு முன்பு இந்த சாதனை படைத்தவராக மோலி கிப்சன் பெயரில் இருந்தது, அவர் இந்த சாதனையை 2017 இல் செய்தார்.

இரட்டைக் குழந்தைகளின் கரு  வைக்கப்பட்டிருந்த இடம்

ரேச்சல் மற்றும் பிலிப் என்ற தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளின் கருக்கள் அமெரிக்காவின் தேசிய கரு தான மையத்தில் வைக்கப்பட்டன. தகவலின்படி, குழந்தைகளின் கருக்கள் திரவ நைட்ரஜனில் உறைந்திருந்தன. இது குறித்து ரிட்ஜ்வே கூறுகையில், ‘உலகிலேயே அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட கரு முட்டைகளை நாங்கள் தேடவில்லை. நீண்டகாலமாக காத்திருந்த உயிர்களையே நாங்கள் தேடினோம். இதில் மனதை கவர்ந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் எங்களுடைய சிறிய குழந்தைகள் என்றாலும், அவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள்’ என்றார்.

மேலும் படிக்க | இது ரத்தக்களறியான பூமி போல... இரத்த சிவப்பு நிறத்தில் பாயும் ஆறு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News