இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

ஸ்பானிய தொலைக்காட்சி நடிகை ஒருவர், தனது இறந்த மகனின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்ட வாடகைத் தாய் மூலம் பிறந்த சில வாரங்களே ஆன குழந்தையை சமீபத்தில் தத்தெடுத்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2023, 09:35 AM IST
  • அனைத்து வகையான வாடகைத் தாய் முறையும் சட்டவிரோதமானது என கருதப்படுகிறது.
  • இறந்த மகனின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானது.
  • பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு.
இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்! title=

குழந்தை இல்லாத பலர் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தத்து எடுப்பது வழக்கம்.  அதே போல் தான் ஸ்பானிஷ் நடிகை ஒருவரும் தத்து எடுத்துக் கொண்டார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் யாரோ ஒருவரது குழந்தையை அல்ல... அவர் இறந்து போன தனது மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்துள்ளார். மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாக, 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை. வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தத்தெடுப்பு பற்றிய வினோதமான விஷயம் என்னவென்றால், நடிகையின் இறந்த மகன் மூலம் குழந்தை பிறந்தது என்பது தான்., இது ஸ்பெயினில் வாடகைத் தாய் மற்றும் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியது. இதற்கிடையில், ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டார்.

மேலும் படிக்க | தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

"இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி" என்று தொலைக்காட்சி நடிகை அனா ஒப்ரெகன் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நேர்காணலின் போது, அதன் அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்தார். " இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்?" குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

ஒப்ரெகானுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருந்தது -  அது அவரது இறந்த மகன் அலெஸ் லெகியோ. ஆலெஸ் தனது 27 வயதில் புற்று நோயால் 2020 இல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாடகைத் தாய் சட்டவிரோதமாக கருதப்படாததால், புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் வாடகைத் தாய்க்கு, இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை கருத்தரிக்கப்பட்டது. இறந்த மகணின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானது.

ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையின் மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்தெடுப்பது ஸ்பெயினில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. அங்கு அனைத்து வகையான வாடகைத் தாய் முறையும் - பணம் எதுவும் கை மாறாத "பரோபகார" நடவடிக்கை என்று அழைக்கப்படுவது உட்பட - அனைத்து  விதமான முறையும் சட்டவிரோதமானது என கருதப்படுகிறது.

மேலும் படிக்க | விண்வெளியில் தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ள இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News