இது ரத்தக்களறியான பூமி போல... இரத்த சிவப்பு நிறத்தில் பாயும் ஆறு!

பெருவில் உள்ள அதிசய நதியான ‘ரத்த ஆற்றை’ காண ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆற்றில் பருவமழை காலத்தில் மட்டுமே முழுமையான நீரோட்டத்தைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2023, 02:04 PM IST
  • பெருவில் இரத்த சிவப்பு ஆறு உள்ளது
  • தண்ணீர் சிவந்திருப்பதை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்
  • ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆற்றைக் காண வருகின்றனர்.
இது ரத்தக்களறியான பூமி போல... இரத்த சிவப்பு நிறத்தில் பாயும் ஆறு! title=

உலகம் மர்மங்கள் நிறைந்தது. சில சமயங்களில் நாம் நம்பவே முடியாத பல விஷயங்களை பற்றி கேள்வி படுகிறோம். இப்போது ஒருவர் உங்களிடம் ஒரு ஏரி, நதி அல்லது கடலின் நீரின் நிறம் என்ன என்று கேட்கிறார். இதற்கு பதில் வெள்ளை, பழுப்பு அல்லது நீலம் என்று கூறுவார்கள். ஆனால், உலகில் உள்ள ஒரு அதிசய நதியின் நீர் நிறம் இரத்தத்தைப் போன்ற சிவப்பு நிறத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆறு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. இந்த ஆற்றை பார்க்கவும், தண்ணீரை தொடவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

சிவப்பு ஆறு ஓடும் இடம்

செந்நீர் கொண்ட இந்த நதி தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள குஸ்கோவில் அமைந்துள்ளது. இது உள்நாட்டில் புகாமாயு என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசய நதி பெருவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆற்றின் நீர் மிகவும் பயங்கரமாகவும் இரத்தக்களரியாகவும் தெரிகிறது. ஆனால் அதன் ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளது. இந்திய நதிகளுடன் ஒப்பிடும்போது, ​​புகாமாயு நதி மிகவும் மெல்லியதாகவும், அதன் வழியாக ஓடும் நீரின் அளவும் குறைவாகவும் உள்ளது. பருவமழை காலத்தில் மட்டும் ஓடும் இந்த ஆற்றில், மற்ற நேரங்களில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருக்கும். மீதமுள்ள நாட்களில் ஆற்றின் நிறமும் பழுப்பு நிறமாக காட்சி அளிக்கும்.

நதி நீர் ஏன் சிவப்பாக மாறுகிறது

பெரு நாட்டின் புகாமாயோ நதி பாயும் பகுதி கனிமங்கள் நிறைந்தது. இந்த பகுதியில் இரும்பு ஆக்சைட்டின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஆற்று நீரில் இரும்பு ஆக்சைடு மண் அதிக அளவில் கரைகிறது. இந்த மண் அரிப்பு காரணமாக, ஆற்றின் நீரின் நிறம் பழுப்பு நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது. அதனால், இந்த நதி வேறொரு கிரகத்தில் இருந்து வந்தது போல் தெரிகிறது. பச்சைப் புல்லின் வழியே ஓடும் சிவப்பு நீர் மிகவும் அழகாகத் தெரிகிறது.

மேலும் படிக்க | தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

பால்கோயோ ரெயின்போ மலைப் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் நதி

ரத்த சிவப்பு ஆறு குஸ்கோ நகரின் தென்கிழக்கே உள்ள பால்கோயோ ரெயின்போ மலைப் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இந்த பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற வினிகுன்கா ரெயின்போ மலை உள்ளது. இது கார்டில்லெரா வில்கனோட்டா மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இந்த ஆற்றைக் காண, மழைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். அந்த நேரத்தில் ஆற்றின் நீர் பிரகாசமான சிவப்பு நிறத்தில் தெரிகிறது மற்றும் ஓட்டம் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிவப்பு நதி வீடியோ

 

 

சிவப்பு நதியின் வீடியோ சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் இதை இயற்கையின் அதிசயம் என்று கூறி ஆச்சரியப்படுகிறார்கள். அதன் வீடியோ காட்சிகளில், ஆற்றின் சிவப்பு நீர் மலைகளுக்கு இடையில் இருந்து வெளியேறுவதைக் காணலாம். மழை பெய்யும் போதெல்லாம் இங்குள்ள மலைகளில் இருக்கும் கனிமங்கள் ஆற்றின் நீரில் கலக்கிறது. பெருவின் அவுசங்கேட் மலைத்தொடரில் உள்ள ஒரு ஆறும் சிவப்பாக காணப்படும். வினிகுன்சாவின் ரெயின்போ மலைக்கு அருகில் ஒரு ரத்த ஆறு உள்ளது, மற்றொரு ஆறு பால்கோயோவின் ரெயின்போ மலைக்கு அருகில் உள்ளது.

மேலும் படிக்க | உயிருடன் எரிக்கப்பட்ட 1,60,000 பேர்; கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்!

மேலும் படிக்க | மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன... ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News