தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு... பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!

இங்கிலாந்தில், புனித் வெள்ளி அன்று, சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண், தனது மன உறுதியால், பேரழிவு தரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2023, 01:25 PM IST
  • சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண்.
  • இரண்டு தலையணை உறைகளும் கேபிள் ஒயர்களால் கட்டப்பட்டிருந்தது.
  • பாம்புகள் உள்ளே அசையத் தொடங்கியதும், ஒரு பயங்கரமான சத்தம் வந்தது.
தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு... பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்! title=

பொது இடங்களில் கிடக்கும் எந்தவொரு உரிமைகோரப்படாத பொருளை தொட வேண்டாம் என்று மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அடையாளம் தெரியாத பொருட்களின் உள்ளே என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாததால், நீங்கள் முதலில் அவற்றின் அருகில் செல்லவேக்கூடாது. சில நேரங்களில் இந்தப் பொருட்கள், சாலைகள், நடைபாதைகள் அல்லது பொதுப் போக்குவரத்தில் கிடப்பதைக் காணலாம். அது மிகவும் ஆபத்தான பொருளாக இருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. தெரியாமல் அதனை கையாளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது. இதனை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது

சமீபத்தில், சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண், தனது மன உறுதியால், பேரழிவு தரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார். இங்கிலாந்தின் ஹக்கிள்கோட்டைச் சேர்ந்த 54 வயதான மரியா க்ளட்டர்பக், புனித வெள்ளி (ஏப்ரல் 7) இரவு குப்பைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார். குப்பைகளை சேகரிக்கும் போது, சாலையோரம் கிடந்த இரண்டு தலையணை உறைகளை கண்டாள். ஆரம்பத்தில், அவை மணல் மூட்டைகள் என்று அவள் நினைத்தாள். கூர்ந்து பார்த்தபோது, இரண்டு தலையணை உறைகளும் கேபிள் ஒயர்களால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டாள்.

மேலும் படிக்க | ஆவியுடன் திருமணம்... ஹனிமூன்..! மஜா பாடகியை திடீரென மிரட்டும் பேய் கணவர்! என்ன தான் நடக்குது?

தலையணை உறைகளுக்குள் யாராவது தங்கள் நாய்க்குட்டிகளையோ பூனைக்குட்டிகளையோ விட்டுச் சென்றிருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.  தன் காலால் பொருட்களை அசைத்தாள். அவளுக்கு முற்றிலும் அதிர்ச்சியாக, உள்ளே நகரும் பொருட்கள் விலங்குகள் அல்ல, ஆனால் ஊர்வன அல்லது பாம்புகள் என்பதை அவள் உணர்ந்தாள். ஒரு நொடி கூட வீணாக்காமல், உள்ளூரில், பாம்புகள் மற்றும் ஊர்வன வகைகளை கையாளும் கடையின் எண்ணை டயல் செய்தாள். கடையில் இருந்து அவர்களின் போனை எடுக்காததால், மரியா உடனடியாக போலீசுக்கு போன் செய்தார்.

பாம்புகள் உள்ளே அசையத் தொடங்கியதும், ஒரு பயங்கரமான சத்தம் வந்ததாக மரியா ஒப்புக்கொண்டார். "99 சதவிகிதம் உறுதியாக" இருந்தபோதிலும், அவளது கணிப்பு தவறாக இருந்தால், தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் அவளுக்கு இருந்தது. ஆனால், போலீஸ் அந்த இடத்திற்கு வந்த போது, ​​அவளுடைய கணிப்பு சரி என உறுதியானது.

போலீசார் பையைத் திறந்தபோது, இரண்டு தலையணை உறைகளுக்குள் இரண்டு பெரிய மலைப்பாம்புகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அருகில் வசித்த மரியாவின் நண்பர் ஒருவர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்ததில், அன்று மாலை 3 மணி முதல் ஆபத்தான மலைப்பாம்புகள் அங்கு விடப்பட்டிருப்பது தெரியவந்தது. குளிர்ந்த வானிலை மற்றும் குளிர்ந்த காற்று காரணமாக, அவை வேகமாக அசைய முடியாமல் இருந்தது பின்னர் தெரியவந்தது. மலைப்பாம்புகள் சில அடையாளம் தெரியாத உரிமையாளரின் செல்லப்பிராணிகளாக இருக்கலாம் என்று மரியா பின்னர் கூற்இனார், பாம்புகள் பராமரிப்பு மிகவும் கடினமானது மற்றும் செலவு பிடித்தது என்பதால், பராமரிக்க முடியமல் காரணமாக பாம்புகளை விட்டு விட்டு சென்றிருக்கலாம் என அவர் கருதினார்.

மேலும் படிக்க | மதுவிற்கு அடிமையான ‘குடிகார’ நாய்! ‘சரக்கு’ கிடைக்காமல் தவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News