மனிதர்கள் மதுவிற்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெறும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இங்கே ஒரு நாய்க்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள நாய் ஒன்று மதுவுக்கு அடிமையாகிய நிலையில், அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெற்ற முதல் நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது. அதன் உரிமையாளர் மது அருந்தி விட்டு தூங்குவதற்கு முன், மது பானத்தை மிச்சம் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த மதுவை தொடர்ந்து எடுத்து கொண்டு வந்துள்ளது கோகோ நாய். நீண்ட நாட்களாக இந்த பழக்கம் தொடர்ந்ததால் மதுவிற்கு அடிகையாகியுள்ளது
இந்நிலையில், அவரது உரிமையாளர் இறந்த பிறகு, மது கிடைக்காததால், உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோகோவும், மற்றொரு நாய் மதுவிற்கு அடிமையான நிலையில் கால்நடை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் நாய்க்கு சிகிச்சை அளிக்க உட்சைட் விலங்கு நல அறக்கட்டளைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. நாய் மது அருந்துவதைக் கண்டது அவர்களுக்கு "முதல்" அனுபவம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, அதனுடன் சிகிச்சைக்காக வந்த மற்றொரு நாய் சிகிச்சை பலனளிக்காமல் பின்னர், வலிப்பின் காரணமாக இறந்தது. கோகோவுக்கும் வலிப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கோகோ நாயின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மேலும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதற்கு நான்கு வாரங்கள் அதற்கு தூக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன.
ஃபேஸ்புக் பதிவில், உட்சைட் அனிமல் வெல்ஃபேர் டிரஸ்ட் கோகோவிற்கு ஒரு புதிய வீடு தேவை என்ற கோறிக்கையுடன், என்ன நடந்தது என்று விவரித்தது. '' மதுவுக்கு அடிமையான நாய்க்கு சிகிச்சை அளிப்பது இதுவே முதல் முறை. எங்கள் சிறப்பு பராமரிப்புப் பிரிவின் புதிய உறுப்பினரான கோகோ என்ற அழகான பையனை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம். கோகோ ஒரு மாதத்திற்கும் மேலாக எங்களுடன் இருக்கிறார், வந்ததிலிருந்து தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. அவரது கதை ஒரு சோகமானது. எங்கள் சிறப்பு சிகிச்சை பிரிவு எவ்வளவு முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது, ” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
''கோகோ தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் 24 மணிநேரமும் கவனிப்பு தேவைப்பட்டது. மது அருந்தி அடிமையானதால் ஏற்பட்ட உடல் நல குறைவினால், பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. மது பழக்கத்தில் இருந்து விடுபட உதவவும், மேலும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் அவர் நான்கு வாரங்கள் தூக்க மருந்து கொடுக்கப்பட்டதாக,'' என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தவறுதலாக கூட ‘இந்த’ விஷமீனை சாப்பிடாதீங்க! கோளமீன் சாப்பிட்ட தம்பதி மரணம்!
சிகிச்சைக்கு பின் இப்போது ஒரு சாதாரண நாயைப் போல நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளது. எனினும் இன்னும் சிறிது கவனிப்பு தேவை. உடல் ரீதியாக அவர் குணமடைந்துவிட்டதாகத் தோன்றினாலும், மனதளவில் அந்த நாய் சில சமயங்களில் மிகவும் கவலையுடன் சோர்வாக இருக்கிறது.
ஒரு சிறிய அளவு ஆல்கஹால் கூட நாய்களுக்கு விஷமாக மாறும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக சிறிய நாய்க்குட்டிகளுக்கு, மது மிகவும் ஆபத்தானது. செல்லப்பிராணியின் உடல் அதை உறிஞ்சுவதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பெரும்பாலான நாய்களுக்கு ஆல்கஹால் விஷம் கீழே சிந்திய மதுபானங்களை உட்கொள்வதால் ஏற்படுகின்றன என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஹேண்ட் சானிடைசர் மற்றும் ஆண்டிஃபிரீஸ் உள்ளிட்ட பிற வகைகளும் உட்கொள்வதும் மிக ஆபத்தானது. வாந்தி, நிலை கொள்ளாமல் இருந்தால், வழக்கத்திற்கு மாறாக நடந்த கொள்ளுதல் ஆகியவை அதன் உடல் ஆல்கஹால் விஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் அறிகுறிகளாகும்.
மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ