‘விடாமுயற்சி’ படத்திற்காக உடல் மெலிந்த அஜித்..? வெளியானது புது புகைப்படம்..!

Ajith Kumar Latest Photo: அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Oct 21, 2023, 07:14 PM IST
  • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் நடந்து வருகிறது.
  • அஜித், இப்படத்திற்காக உடல் எடை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்திற்காக உடல் மெலிந்த அஜித்..? வெளியானது புது புகைப்படம்..!  title=

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடத்திருந்த இவர், அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். 

விடாமுயற்சி:

ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே கமிட் ஆகும் அஜித்குமார், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் வெளியானது. இதை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதையடுத்து உள்ளூர் டூர், இந்தியா டூர் என்றிருந்த அஜித் ஒரே அடியாக உலக டூர் சென்றுவிட்டார். அவரை பிடித்து ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டு விட்டனர், படக்குழுவினர். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கலக தலைவன், தடம், தடையர தாக்க உள்ளிட்ட சில படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். 

தாமதமாக வரும் அப்டேட்ஸ்கள்..

விடாமுயற்சி படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், படம் குறித்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டதே தவிர, இதையடுத்து படம் குறித்த வேறு எந்த அப்டேட்ஸையும் இன்றளவும் வெளியடவில்லை. உலக டூரில் பிசியாக இருந்த நடிகர் அஜித் குமார், சில வாரங்களுக்கு முன்புதான் ஃபிரீயானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள், அஜர்பைஜானில் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | ‘விடாமுயற்சி' படத்திற்காக அஜித்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

உடல் எடையை குறைத்த அஜித்?

நடிகர் அஜித்குமாருக்கு தற்போது 52 வயதாகிறது. இவர், சமீபத்தில் நடித்திருந்த அனைத்து படங்களிலுமே உடல் எடை அதிகரித்துதான் காணப்பட்டார். கடைசியாக ‘விவேகம்’ படத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்த அஜித், அதையடுத்து வந்த அனைத்து படங்களிலும் நார்மல் ஆகவே இருந்தார். இதையடுத்து, இவர் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Ajithkumar

அஜித்தின் வைரலாகும் புகைப்படம்:

நடிகர் அஜித்குமாரின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதில், அவர் உடல் எடை மெலிந்து காணப்படுவதாகவும், விடா முயற்சி படத்திற்காக அவர் எடை குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

எப்போதும் கேமராவிடம் இருந்தும் ஊடகத்தினரிடம் இருந்தும் தள்ளியே இருக்கும் நடகர்களுள் ஒருவர் அஜித்குமார். இவர் எந்த சமூக வலைதள பக்கங்களிலும் இல்லை. இவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி, சமீபத்தில்தான் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார். இதில்தான், அஜித்தின் யாரும் பார்த்திராத பல புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்தன. அஜித்தை அவ்வப்போது அவரது ரசிகர்களும் படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் அஜித்துடன் எடுத்து பதிவிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 

யார் ஜாேடி தெரியுமா? 

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே அஜித்துடன் பல படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார். தற்போது த்ரிஷா விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து யாருடன் கூட்டணி? 

அஜித்குமாரின் 62ஆவது படம்தான், விடாமுயற்சி. இதையடுத்து, அவர் தனது 63 வது படத்தில் தன்னை வைத்து முன்னரே படம் எடுத்த ஒரு இயக்குநருடன் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவாதான் அந்த இயக்குநர் என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது. அவர் தற்போது சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார். 

மேலும் படிக்க | மாவீரன் to குட்நைட்-ஆயுத பூஜை சிறப்பு திரைப்படங்களின் முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News