மாவீரன் to குட்நைட்-ஆயுத பூஜை சிறப்பு திரைப்படங்களின் முழு லிஸ்ட்!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை ஒட்டி, தமிழ் தொலைக்காட்சிகளில் பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. இதில், எந்தெந்த படங்களை எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம்? விவரம் இதோ. 

Written by - Yuvashree | Last Updated : Oct 21, 2023, 01:32 PM IST
  • விஜயதசமி, ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்.
  • ரிலீஸான புது திரைப்படங்கள் பல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன.
  • எந்த சேனலில் எந்த படத்தை பார்க்கலாம்? இதோ லிஸ்ட்!
மாவீரன் to குட்நைட்-ஆயுத பூஜை சிறப்பு திரைப்படங்களின் முழு லிஸ்ட்!  title=

விஜயதசமி, ஆயுதபூஜை திருநாள் என்று வந்து விட்டாலே, சின்னத்திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம், எப்போதும் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். புதுப்புது படங்களை தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து குடும்பத்தினருடன் பார்க்கலாம். என்னதான் ஓடிடிக்களின் வருகை அதிகரித்து விட்டாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பது தனி சுகம்தான். அப்படி, இந்த வருடமும் பல புதுப்புது படங்கள் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. எந்த படத்தை எந்த சேனலில் பார்க்கலாம்? இங்கே தெரிந்து கொள்வோம். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

அக்டோபர் 23:

சிறப்பு நிகழ்ச்சிகள்:

>சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் - காலை 9 மணி

>இங்கிலீஷ் பேசினாலும் தமிழண்டா (கேம் ஷோ) - மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது

சிறப்பு திரைப்படங்கள்:

>யானை (அருண் விஜய், பிரியா பவானி சங்கர்)- 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

>டிடி ரிட்டர்ன்ஸ் (சந்தானம், சுரபி) - மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

அக்டோபர் 24:

சிறப்பு நிகழ்ச்சிகள்:

>சிறப்பு படிமன்றம் - காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது

>பாட்டு பாடவா? ஆட்டம் போடவா?  (கலை நிகழ்ச்சி) - 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

Tamil Movies

சிறப்பு படங்கள்:

>தீர்க்கதரிசி (சத்யராஜ், அஜ்மல்) - மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

ஜீ திரையில் என்ன ஸ்பெஷல்?

>அக்டோபர் 23: தி கிரேட் இந்தியன் கிச்சன் - நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது

>அக்டோபர் 24: பொம்மை நாயகி - நண்பக 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது

சன் டிவியில் என்ன ஸ்பெஷல்?

அக்டோபர் 23: 

சிறப்பு நிகழ்ச்சிகள்:

>வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா - காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 
>ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் சிறப்பு நிகழ்ச்சி-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது
>பேச்சில்லை வீச்சு தான் (வானத்தை போல சீரியல் குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சி)  - காலை 10மணிக்கு ஒளிபரப்பாகிறது  

மேலும் படிக்க | விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை.. த்ரிஷா லிப்லாக் ஆல் வந்த பிரச்சனையா?

சிறப்பு படங்கள்:

>பேட்டை (ரஜினி, சிம்ரன், மாளவிகா மோகனன்)-காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது
>உனக்கும் எனக்கும் (ஜெயம் ரவி, த்ரிஷா)-காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது
>மாவீரன் (சிவகார்த்திகேயன், அதிதி சங்கர்)-மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 
>பாரீஸ் ஜெயராஜ் (சந்தனம், தேஜஸ்வினி)-இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

அக்டோபர் 24:

சிறப்பு நிகழ்ச்சிகள்:

>கிராமத்தில் ஒருநாள் - காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது
>உடன் பிறப்பே - காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது 
>செல்ல கலெக்டர் சுந்தரி - காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது 
>எதிர்நீச்சல் கலாட்டா - மதியம் 2 மணிக்கு ஒளிபரபாகிறது

சிறப்பு திரைப்படங்கள்:

>சிங்கம் 2 (சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா)-காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 
>நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (வடிவேலு, ஷிவாங்கி)-மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது

விஜய் டிவி சிறப்பு திரைப்படங்கள்:

>அக்டோபர் 23: மாமன்னன் (உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ்) - காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 

>அக்டோபர் 24: குட் நைட் (மணிகண்டன், மீதா ரகுநாதன்) - காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 

கலைஞர் தொலைக்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

அக்டோபர் 23:

>விடுதலை (சூரி, விஜய் சேதுபதி) - பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

>லவ் டுடே (பிரதீப் ரங்கநாதன், இவானா)
 - மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

அக்டோபர் 24:

>அகிலன் (ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர்) - பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

மேலும் படிக்க | மருத்துவமனையில் பரிதாபமாக கிடக்கும் இளம் நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News