சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளம்பெண் பலி... முதல்வர் இரங்கல்

Virudhunagar Sattur Fire Accident: விருதுநகரில் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2023, 08:21 PM IST
  • மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது.
  • 12 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகி தேசம் அடைந்தன.
சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளம்பெண் பலி... முதல்வர் இரங்கல் title=

Virudhunagar Sattur Fire Accident: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தீடீர் உராய்வால் விபத்து

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் இந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணி வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், உணவு இடைவெளிக்கு பின்னர் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நிகழ்ந்தது.

மேலும் படிக்க | இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் அலுவலக அறையில் இருந்த மார்க்நாதபுரத்தை சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் வெடி விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

12 பைக்குகள் சேதம்

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் 12 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகி தேசம் அடைந்தன. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விருதுநகர் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதல்வர் இரங்கல்

விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்,"விருதுநகர்‌ மாவட்டம்‌, வெம்பக்கோட்டை வட்டம்‌, கங்கரகோட்டை வருவாய்‌ கிராமத்தில்‌ இயங்கி வந்த தனியாருக்குச்‌ சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில்‌ எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்‌ மார்க்கநாதபுரத்தைச்‌ சேர்ந்த ஜெயசித்ரா(24) என்பவர்‌ உயிரிழந்தார்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு வேதனையடைந்தேன்‌.

உயிரிழந்தவரின்‌ குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின்‌ குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | டெல்லி செல்லும் இபிஎஸ்... அமித் ஷாவிடம் கடிதம் கொடுக்கிறார் - என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News