டெல்லி செல்லும் இபிஎஸ்... அமித் ஷாவிடம் கடிதம் கொடுக்கிறார் - என்ன விஷயம்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஏப். 26ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2023, 04:13 PM IST
  • சமீபத்தில், இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
  • கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டி.
  • பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் அதிமுக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செல்லும் இபிஎஸ்... அமித் ஷாவிடம் கடிதம் கொடுக்கிறார் - என்ன விஷயம்? title=

அதிமுகவில் இரட்டை தலைமை குறித்த கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்ததை அடுத்து, ஒற்றை தலைமை வேண்டி பல்வேறு குரல்கள் எழுந்தன. அந்த வகையில், தொடர் போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தொடர்ந்து, அவர் அதிமுகவை பொதுச்செயலாளராக தேர்வானதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. கட்சியின் தலைமை பொறுப்பை ஏறத்தாழ அடைந்துவிட்ட இபிஎஸ், அதனை தக்கவைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனால், நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு பிறகு, அதாவது அதிமுக - பாஜக கூட்டணியின் தோல்விக்கு பிறகு, இரு கட்சியினருக்கும் இடையே பிணக்கு இருப்பதாக கூறப்பட்டது. அதிமுக தலைமை குறித்து பாஜக நிர்வாகிகள் கருத்துகளை உதிர்க்க, அதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் பதிலடி அளிக்கும் காட்சிகளும் நடந்தேறின. 

மேலும் படிக்க | ரோடு ஒன்னும் சரியில்லை.. வெளுத்து வாங்கிய தருமபுரி எம்பி செந்தில்குமார்!

தொடர்ந்து, இபிஎஸ் தலைமையை அண்ணாமலை விரும்பவில்லை என கூறப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், அண்ணாமலையும் செய்தியாளர் சந்திப்புகளிலும், இபிஎஸ் குறித்த சில மாற்று கருத்துகளை தெரிவித்து வந்தார். எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலை அனுபவம் இல்லாதவர் என நேரடியாகவும் கூறினார். இத்தகைய சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விகளும் எழுந்தது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே. 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பாஜகவுடனான கூட்டணியில் இருந்தும், அதிமுக தனித்து போட்டியிடுவது பல கேள்விகளை எழுப்பியது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பாஜக கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதனால், டெல்லி தலைமையுடன் அதிமுக இணக்கமாக இருப்பதாகவும், மாநில தலைமையில் தான் பிரச்னை எனவும் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரும் ஏப். 26ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசுவதுடன், தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் & ஒழுங்கு நிலை குறித்தும் கடிதம் அளிக்கிறார் என கூறப்படுகிறது. 

முன்னதாக, இந்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க சென்னை வந்திருந்தார். அப்போது, பிரதமரின் வரவேற்பு மற்றும் வழியனுப்பு நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஆனால், அவரை தனியாக சந்தித்து பேச பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News