SIP முதலீட்டின் பாதுகாப்பான ஒரு வழியாக நம்பப்படுகின்றது. சரியான நேரத்தில் எஸ்ஐபி மூலம் முதலீட்டை தொடங்கி ஒருவர் பாதுகாப்பான வழியில் கோடீஸ்வரர் ஆகலாம்.
இந்த பதிவில் SIP மூலம் கோடீஸ்வரர் ஆவதற்கான சூத்திரத்தை காணலாம்.
இதற்கு மாதா மாதம் 4500 ரூபாய்க்கான SIP -ஐ தொடங்க வேண்டும். ரூ.4,500 முதலீடு செய்ய ஒரு நாளைக்கு 150 ரூபாய் சேமிக்க வேண்டும்.
இந்த முதலீட்டை 32 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்து வந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
இந்த முதலீட்டு தொகைக்கு 12 சதவீத வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்போது காம்பவுண்டிங் ரேட்டையும் சேர்த்து மொத்தமாக 2,02,91,837 ரூபாய் கிடைக்கும்.
முதலீட்டாளர் முதலீடு செய்த தொகை 17,28,000 ரூபாயாக இருக்கும். ஆனால் திட்டத்தின் முடிவில் முதலீட்டாளருக்கு 1.85 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.