காலை எழுந்ததும் மூளையின் திறன் புத்துணர்வுடன் இருக்கும். இவை உங்கள் படிப்பை ஊக்குவிக்கின்றது.
காலையில் சிரமமான பாடத்தை படிக்க வேண்டும். ஏனென்றால் காலையில் மூளையில் செயல்திறன் சுறுசுறுப்பாக இருக்கும்.
தினமும் காலை எழும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். விடுமுறை நாட்களிலும் காலை எழுந்து படிப்பதை தொடர வேண்டும்.
நேற்றைய பாடங்களை இன்று ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்.
உங்கள் மீது ஒரு நம்பிக்கையை இந்த காலை எழும் பழக்கம் உண்டாக்கும்.
காலை பொழுதோடு எழுந்து உடற்பயிற்சி செய்தபின் தே நீர் பருகி பின்னர் படிக்கத் தொடங்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் உடல் புத்துணர்வு அளிக்கும்.
அன்றைய பாடம் அன்றே முடித்துவிட வேண்டும்.