நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் இன்னும் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நேர்த்தியான முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஓமத்தில் உள்ள பண்புகள் சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவி செரிமானத்தையும் சீராக்குகின்றன.
சுகர் நோயாளிகள் தினமும் பூண்டு உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் செரிமானம் சீராகி குளூகோஸ் அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் கற்றாழையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்சுலின் சென்சிடிவிட்டியை கட்டுக்குள் வைத்து, குளுக்கோசை திறம்பட பயன்படுத்த தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.