மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானது.
இரத்த சர்க்கரை அளவு 100-125mg/dL -க்கு இடையில் இருந்தால், வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யவும், சர்க்கரை அளவை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு 200mg/dL என்ற அளவை தாண்டுவது ஆபத்தானதாக பார்க்கப்படுகின்றது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
ஃபாஸ்டிங் சுகர் அதிகமாக இருப்பவர்கள் தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது இன்சுலின் சென்சிடிவிட்டியை சீராக்க உதவுகின்றது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உணவில் கார்போஹைட்ரேட்ஸ் அளவை குறைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளசை கட்டுக்குள் வைக்கும். இதை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் உதவி கிடைக்கும்,
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.