எந்த வேலையையும் செய்ய உடலுக்கு கட்டளை கொடுப்பது மூளை தான். மூளையைஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ள ப்ரோக்கோலி, கீரை, மற்றும் இதர பச்சை நிற காய்கறிகள் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும்.
சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற போன்ற மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளை திசுக்களை உருவாக்க உதவுகிறது.
முட்டையில் உள்ள லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் நினைவுத் திறனுக்கான செல்களை உருவாக்க உதவி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.யில் உள்ள லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் நினைவுத் திறனுக்கான செல்களை உருவாக்க உதவி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
மூளையில் அசிடைல்கொலின் அளவை அதிகரிக்க பாதாம் உதவுகிறது. அதில் காணப்படும் புரதங்கள் உருவாக்கும் நரம்பியக்கடத்தி இரசாயனம் நினைவாற்றலை பெருக்க உதவுகிறது.
வாதுமை கொட்டையில் மூளைக்கு பல வழிகளில் பயனளிக்கும் ஆல்பா-லினோலெனிக் அமிலம், பாலிபினோலிக் கலவைகள் நிறைந்துள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.