பொதுவாக காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது
ஆனால், சில காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தக்காளியை சமைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் 50 சதவீதம் அதிகரிக்கின்றன.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்னும் ஊட்டச்சத்து, சமைத்து சாப்பிடுவதால் முழுமையாக உடலில் சேரும்.
கீரையை சமைத்து சாப்பிடுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை முழுமையாக பெறலாம். இல்லையென்றால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
காளானில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் முழுமையாக உடலுக்கு கிடைக்க, அதனை வேக வைத்து சாப்பிட வேண்டும்.
காலிஃப்ளவரில் உள்ள சத்துக்கள் உடலில் சேர அதனை சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.