உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல ஆபத்துகள் நம்மை ஆட்கொள்ளக்கூடும்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில காய்கள் பற்றி இங்கே காணலாம்.
ப்ரோக்கோலி கெட்ட கொழுப்புக்கு தீர்வாக அமையும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் நோயாளிகள் தினமும் தங்கள் உணவில் பாலக் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றும் தன்மை வெண்டைக்காயில் உள்ளது. கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் இதை தினமும் உட்கொள்ளலாம்.
கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த கேல் கீரை மிகவும் உபயோகமாக இருக்கும். இதில் நார்ச்சத்தும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.