அவகேடோவில் உள்ள ஆக்சிஜனேற்ற தன்மைகள் உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இவை சருமத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்கின்றது.
அக்ரூட் பருப்பு என்று சொல்லப்படும் வால்நட் இதில் மெக்னீசியம், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 அமிலக் கொழுப்புகள் நிறைந்துள்ளன. உடல் வீக்கத்தை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
குடமிளகாய் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் கள் வைட்டமின் ஏ ஆக மாறி உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. மேலும் சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை இதில் நிறைந்துள்ளன.
சக்கர வள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் தோல் வறட்சியை தடுத்து சூரிய கதிரில் இருந்து பாதுகாக்கிறது.
கிரீன் டீ தினமும் காலை மற்றும் மாலை குடித்து வந்தால் உங்கள் சருமத்தில் ஆரோக்கியமும் மற்றும் பளபளப்பும் உண்டாகும்.
ப்ரோக்கோலி என்று அழைக்கப்படும் காய்கறி வகையை சேர்ந்த இவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து சருமத்தை ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)