அளவிற்கு அதிகமான இரும்பு சத்து இதயம் - கல்லீரலை பாதிக்கும்!

';

இரும்பு சத்து குறைபாட்டினால், ரத்த சோகை உட்பட பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சிய இரும்புச்சத்தும் மிக ஆபத்தான் விளைவுகளை ஏற்படுத்தும்

';

இரும்புச் சத்து

நமது உடலில், தேவைக்கும் மிக அதிகமான இரும்புச் சத்து சேமிக்கப்படும் போது, ​​அது உடல் உறுப்புகளை அது சிறிது சிறிதாக சேதப்படுத்தத் தொடங்குகிறது.

';

ஹீமோக்ரோமாடோசிஸ்

இரும்பு சத்து உடலில் அளவிற்கு அதிகமாக தேங்கும் நிலை ஹீமோக்ரோமாடோசிஸ் (Hemochromatosis) எனப்படுகிறது.

';

நரம்பு பிரச்சனை

ஹீமோக்ரோமாடோசிஸ் நிலையில், குடல் மூளை நரம்பு ஒருங்கிணைப்பில் பிரச்சனை, அல்சைமர் மற்றும் கால், கை வலிப்பு போன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்படலாம்.

';

கல்லீரல்

இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வதால் இரும்பு உப்புகள் திசுக்களில் படிந்து, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் தோலின் பழுப்பு நிறமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

';

இதய செயலிழப்பு

அதிக இரும்புச்சத்து ஊசி போட்டுக்கொள்ளுதல் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளல் ஆகியவற்றால் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது

';

ஆண்மைக் குறைவு

அளவிற்கு அதிகமான இரும்பு சத்து காரணமாக பாலியல் உறவில் ஆர்வமின்மை, ஆண்மைக் குறைவு ஆகியவையும் ஏற்படலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story