அடம் பிடிக்கும் யூரிக் அமிலத்தை அடித்து விரட்டும் பச்சை இலைகள்

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் பொதுவாக இரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்கள் வழியாகச் சென்று சிறுநீராக உடலை விட்டு வெளியேறுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

இலைகள்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் பல வித உடல்நல கோளாறுகள் ஏற்படும். யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் சில இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

துளசி

துளசியில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இதை தவறாமல் உட்கொள்வது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

வேப்பிலை

வேப்பிலை சக்திவாய்ந்த நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது அதிகப்படியான யூரிக் அமிலம் உட்பட உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

சீந்தில்

கிலோய் எனப்படும் சீந்தில் ஆயுர்வேதத்தில் ஒரு பிரபலமான மூலிகை. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது, யூரிக் அமில அளவை நிர்வகிக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

கொத்தமல்லி

கொத்தமல்லி உடலில் இருந்து வீக்கத்தைக் குறைக்கவும், யூரிக் அமிலம் உள்ளிட்ட நச்சுகளை வெளியேற்றவும் உதவும் சேர்மங்களைக் கொண்டுள்ளது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை உட்கொள்வதால் நச்சுக்கள் எளிதாக உடலை விட்டு வெளியேறி யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய உதவி கிடைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 04, 2024

VIEW ALL

Read Next Story