உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அதனால் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க நம் டயட்டில் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அவகேடோவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை நம் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கின்றன.
பூண்டு சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. குறிப்பாக இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது.
கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட் அளவும் குறைகிறது. இதனுடன், இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கிறது.
வெள்ளை அரிசி, கோதுமை ஆகியவற்றுகுக்கு பதிலாக ஓட்ஸ், தினை வகைகள் போன்ற முழு தானியங்களை டயட்டில் சேர்த்துக்கொள்வது கெட்ட கோலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், போன்ற பழங்களை ஓட்ஸ் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துடன் உட்கொள்வது நல்லது. இது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.