ஓவர் எடை வேகமாய் குறைய இந்த நீரை குடிங்க போதும்: சில நாட்களில் ஒல்லியாகலாம்

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

உடல் எடை குறைய

ஆரோக்கியமான வழியில் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் உடல் எடையை குறைக்க உதவும் பல வித பண்புகள் உள்ளன. தொப்பை கொழுப்பை குறைக்க உதவுவதோடு இலவங்கப்படை நீர் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

புதினா

புதினாவில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைக்க புதினா இலைகள் பல வழிகளில் உதவுகின்றன. புதினா நீர் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும் கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

இஞ்சி

இஞ்சியில் உடல் எடையை குறைக்கும் பல பண்புகள் உள்ளன. தினமும் இஞ்சி நீர் குடித்து வந்தால் கலோரிகள் மிக வேகமாக எரியத் தொடங்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இஞ்சியை நசுக்கி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

எலுமிச்சை

உடல் எடையை குறைக்க எலுமிச்சை நீர் மிக உதவியாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை நீர் பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமனில் நிவாரணம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

துளசி

துளசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் துளசி தேநீர் குடிப்பது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

ஓமம்

தினமும் ஓம நீர் குடிப்பதால் செரிமானம் சீராகும். ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் ஓமம் போட்டு இரவு முழுதும் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை சுட வைத்து பருகவும். இதனால் உடல் எடை வேகமாக குறையும்.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Sep 06, 2024

VIEW ALL

Read Next Story