சுகர் லெவலை கட்டுப்படுத்த சுலபமான வழி: தினமும் இதை சாப்பிடுங்க

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

சுகர் நோயாளிகள்

சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க தங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

முழு தானியங்கள்

ஓட்ஸ், கினோவா, பார்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடலுக்கு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

பெர்ரி வகை பழங்கள்

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

இலவங்கப்பட்டை நீர்

தினமும் காலையில் இலவங்கப்பட்டை நீர் குடித்து வந்தால், நாள் முழுதும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

உலர் பழங்கள், விதைகள்

பாதாம், வால்நட் போன்ற உலர் பழங்கள் மற்றும் சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகள் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து ஆகியவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

சால்மன் போன்ற மீன்கள்

சால்மன் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அழற்சியை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

பச்சை காய்கறிகள்

கீரை வகைகள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் கார்போஹைற்றேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏற்ற உணவுகளாக பார்க்கபப்டுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 13, 2024

VIEW ALL

Read Next Story