உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தி, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
யூரிக் அமிலத்தை குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிவி, எலுமிச்சை பழம், தக்காளி, ஆரஞ்சு ஆகிய வைட்டமின் சி நிறைந்த பழங்கள், யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகின்றன.
குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பாலக்கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை உட்கொள்வது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதோடு மூட்டு வலியையும் குறைக்கின்றது.
குளிர்காலத்தில் யூரிக் அமிலம் உடலில் அதிகமானால் மூட்டு வலி தாங்கமுடியாமல் அதிகமாகின்றது. இதை குறைத்து மூட்டுக்கு வலு அளிக்க ஆளி விதைகளை உட்கொள்ளலாம்.
தயிர் உட்கொள்வது யூரிக் அமிலத்தை வேகமாக குறைக்க உதவும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் யூரிக் அமிலத்தை குறைகக் உதவுகின்றன.
அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ள வேப்பிலை யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகின்றது. இதன் சாறு குடிப்பது நன்மை பயக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.