இன்றைய உலகில் இளம் வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது.
இதற்கு வேலை பளு, உணவு, தண்ணீர், மனநிலை என பல காரணிகள் உள்ளது.
இந்நிலையில் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்ய முடியும்.
தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
கற்றாழை இழந்த முடியை மீண்டும் பெற உதவுகிறது. மேலும் பொடுகைக் நீக்குகிறது.
லாவெண்டர், ரோஸ்மேரி போன்ற எண்ணெய்கள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்குகிறது.
வெங்காய சாற்றில் கந்தகம் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
முட்டையில் அதிக புரோட்டீன் நிறைந்துள்ளது. இவை முடி அமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது.