அவகேடோ பழம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் அதிகம் விளைகிறது. இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட பேரிக்காய் போல் தோற்றமளிக்கும்.
இந்த அவகேடோ பழமானது 20 முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும், 60 முதல் 70% ஈரப்பதம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும்.
அவகேடோ பழத்தை அறுவடை செய்ய செடியை நட்டத்திலிருந்து 5 முதல் 6 ஆண்டுகள் வரை நேரம் எடுக்கும்.
அவகேடோ செடியிலிருந்து பச்சை மற்றும் ஊதா ஆகிய இரண்டு நிறங்களில் பழங்கள் கிடைக்கும்.
ஒரு அவகேடோ மரத்திலிருந்து சுமார் 250 முதல் 500 பழங்கள் பறிக்க முடியும். இதன் விலை கிலோவிற்கு 500 வரை விற்பனை ஆகிறது.
சர்க்கரை நோயாளிகள் அவகேடோ பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது.
அவகேடோ பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மேலும் அவகேடோ பழம் கண் பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது.
அவகேடோ பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.