யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் சில இயற்கையான வழிகள் இதோ

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

யூரிக் அமிலம்

இயற்கையான வழியில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் வழிகளை பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

சிவப்பு இறைச்சி

நமது உடல் பியூரின்களை உடைக்கும்போது யூரிக் அமிலம் உருவாகின்றது. யூரிக் அமில அளவை குறைக்க சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் போன்ற பியூரின் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

எடை இழப்பு

எடை இழப்பு யூரிக் அமிலத்தை கடுப்படுத்த உதவும். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் சரியான எடையை பராமரிப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

தண்ணீர்

போதுமான அளவு நீர் அருந்துவது சிறுநீரகம் எளிதாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

பால்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வது யூரிக் அமிலத்தை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

காய்கள் மற்றும் பழங்கள்

காய்கள் மற்றும் பழங்களில் ப்யூரின் அளவு குறைவாக இருப்பதோடு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

காபி

சரியான அளவில் தினமும் காபி உட்கொள்வதும் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 13, 2024

VIEW ALL

Read Next Story