கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைகக் உதவும் சில எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெர்ரி வகை பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், பாலிஃபெனால்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன
ராஜ்மா போன்ற பருப்பு வகைகளில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றது.
ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஆண்டிஆக்சிடெண்டுகளும் மினரல்களும் நிரம்பியுள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைப்பதோடு உடலில் ஏற்படும் அழற்சியையும் கட்டுக்குள் வைக்கின்றன.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பு வேகமாக குறைகிறது.
தக்காளியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.